பள்ளி உளவியல் சேவை பற்றிய பொதுவான தகவல்கள்
(சுருக்கம்: SPD)

பள்ளி உளவியல் சேவை என்பது குழந்தைகள், இளைஞர்கள், பெற்றோர்கள், பள்ளிவல்லுநர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான இலவச சேவையாகும். மேலும் இதற்கு பள்ளி அதிகாரமையம்  Pfäffikon ZH நிதிப்பங்களிப்பு செய்கின்றது.


எங்களால் வழங்கப்படும் உதவிகள்

  • திறன்கள், திறமைகள் (எ.கா. நுண்ணறிவு, மொழி, உணர்தல்) மற்றும் தனிப்பட்ட கற்றல் விருப்பங்களுக்கான பரிந்துரைகள்
  • கற்றல் மற்றும் செயல்திறன் சிரமங்கள்
  • மனதை ஒருமைப்படுத்தும் பிரச்சனைகள்
  • உணர்ச்சி, ஊக்கம் அல்லது சமூக அசாதாரணங்கள்
  • தனிப்பட்ட  பிரச்சனைகள் மற்றும் மோதல்கள்
  • நடத்தை சிக்கல்கள்
  • வளர்ச்சி சிக்கல்கள்
  • கல்விச் சிக்கல்கள்
  • பள்ளி வாழ்க்கை முடிவுகள்
  • சிறப்புக் கல்வித் தேவைகள்

எங்கள் சலுகைகளில் அடங்குபவைகள்

  • பள்ளி உளவியல் ஆய்வுகள்
  • மாணவர்கள், பெற்றோர்கள் அல்லது சட்டபூர்வ பாதுகாவலர்கள், ஆசிரியர்கள், நிபுணர்கள் மற்றும் பள்ளி அதிகாரிகளுக்கான பள்ளி உளவியல் ஆலோசனைகள்
  • சிறப்புப் பள்ளிகளுக்கான தெளிவுபடுத்தல் (தரப்படுத்தப்பட்ட தெளிவுபடுத்தல் நடைமுறை
    (Standardisiertes Abklärungsverfahren SAV-ZH)
  • பள்ளிகளில் நெருக்கடி தலையீடுகள்

எங்கள் சேவை பெறதகுதியுடையவர்கள்

  • பள்ளி சமூகங்களின் பொதுப் பள்ளிகளின் மாணவர்கள்
  • பள்ளி நிர்வாகத்தின் உத்தரவின்படி தனியார் பள்ளிகளின் மாணவர்கள்
  • பள்ளி சமூகத்தில் உள்ள பொதுப் பள்ளியில் ஒரு மாணவருடன் பெற்றோர் அல்லது பிற சட்டப்பூர்வ பாதுகாவலர்கள்
  • ஆசிரிய தொழில் வல்லுநர்கள் மற்றும் பள்ளி அதிகாரிகளின் உறுப்பினர்கள்
  • குழந்தைகள் மற்றும் இளைஞர்களுடன் பணிபுரியும் பிற சேவைகள் அல்லது நிறுவனங்கள்

நாங்கள் பக்கசார்பற்று ( சுதந்திரமாக ) செயல்படுகின்றோம்

நாங்கள் ஆலோசகர்களாக  தீர்வுகளைக் கண்டறிந்து எங்களிடம் உதவிகோருவோருக்கு  உதவுகிறோம்.

எங்களால் வழங்கும்  தீர்வுகளை  செயல்படுத்துவதற்கான பொறுப்பு  உதவிகோருவோரிடம் உள்ளது.


SPD, 23.9.2022